DIPLOMA IN COOPERATIVE MANAGEMENT (முழுநேரம் / Regular) 2026 - 2027
பயிற்சி தகவல் தொகுப்பு
2026-27 ஆம் ஆண்டு முழுநேரம் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி
கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி (முழுநேரம் / Regular) 2026 - 2027
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கங்களாக செயல்படும் (TNCU 27 + 1 others) கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அவர்கள் அறிவுறுத்தியுள்ள நிபந்தனைகளின்படி 2026-27 ஆம் ஆண்டில் பயிற்சியாளர்களின் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதள வழியாக விண்ணப்பிக்கவும், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பயிற்சிக் கட்டணம் ஆகியவை இணையத்தளத்தின் மூலம் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் பொதுநிதி வங்கி கணக்கில் செலுத்துவது தொடர்பாகவும், பரிசீலனைக் குழுவின் ஒப்புதல் விவரம் தெரிவிக்கப்படுகிறது.
கல்வி தகுதி:
மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச கல்வி தகுதியாக +2 தேர்ச்சி அல்லது 10+2 தேர்ச்சியுடன் 3 வருட பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் இணையவழி மூலம் மட்டுமே பெறப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும்.
பெறப்படும் விண்ணப்பங்களை தேர்வு குழுவிற்கு (Selection Committee) சமர்ப்பித்து தேர்வு செய்யப்படும் மாணவர்கள் பயிற்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
பயிற்சியில் சேருவதற்கு 01.07.2026 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகப்பட்ச வயது வரம்பு இல்லை
தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பின்தங்கிய வகுப்பினர் பற்றிய அத்தாட்சி பெற்ற ஜாதி சான்றிதழ் நகல் கட்டாயமாக விண்ணப்ப மனுவுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். இல்லையெனில், அந்த விண்ணப்பங்கள் அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட மாட்டாது.
மாணவர்களின் வருகை Bio-Metric முறையில் மட்டுமே 100 சதவிதம் பதிவு செய்யப்படும்.
ஒரு பருவத்திற்கு குறைந்தபட்சம் 80% வருகை பதிவு இருந்தால் மட்டுமே இறுதி தேர்வு எழுத இயலும்.
80% வருகை பதிவு குறைவாக உள்ள பயிற்சியாளர்கள் எக்காரணம் கொண்டும் இறுதி தேர்வு எழுத அனுமதிக்க இயலாது.
முதல் பருவ பயிற்சி காலத்தில் பயிற்சி பெற்று தேர்வு எழுதி இரண்டாம் பருவ பயிற்சி காலத்தில் 80% வருகை பதிவு பெறாத பயிற்சியாளர்கள் பயிற்சியினை தொடர இயலாது.
| DIPLOMA IN COOPERATIVE MANAGEMENT (முழுநேரம் / Regular) 2026 - 2027 |
கீழ்கண்டுள்ள தலைப்புகளின்படி பயிற்சி கட்டணம் வசூலிக்கப்படும்.
பயிற்சி கட்டண விவரம்
விவரம் தொகை (ரூ)
கற்பிப்புக் கட்டணம் 8,000
விண்ணப்பப் படிவம் (ம) பதிவுக் கட்டணம் 100
நாட்குறிப்பு கட்டணம் 300
எழுது பொருள் கட்டணம் 600
தேர்வு கட்டணம் (ம) சான்றிதழ் 2,500
புத்தக கட்டணம் 2,000
நூலக காப்பீடு தொகை (திரும்ப வழங்க வேண்டியது) 300
தபால் கட்டணம் 207
கூட்டுறவு, கூட்டுறவு முரசு (ம) ஜெர்னல் ஆப் கோவா ப்பரேஷன் இதழ்களுக்கு 500
விளையாட்டுக் கட்டணம் 150
கணினி பயிற்சி கட்டணம் 1,500
நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் 4,543
அடையாள அட்டை 150
மொத்தம் 20,850
கட்டணம் செலுத்தும் முறை:
விண்ணப்ப கட்டணம்: ரூ. 100/- (Online Payment only)
பயிற்சி கட்டணம்: ரூ. 20,750/- (Online Payment only)
மொத்த கட்டணம் ஒரே தவணையில் செலுத்த வேண்டும்.
கட்டணம் திரும்ப வழங்கப்படமாட்டாது.
பயிற்சி நிலைய இடமாற்றம் அனுமதிக்கப்படாது.
பயிற்சிக்கான திட்டங்கள்
புதிய பாடத்திட்டத்தின்படி கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி ஒரு வருட கால பயிற்சியாக இரண்டு பருவ முறைகளாக (Semester I & II) (6 மாதங்கள் + 6 மாதங்கள்) பிரிக்கப்பட்டுள்ளது. பின்வரும் பாடப்பிரிவுகளில் தமிழில் பாடம் நடத்தப்பட்டு, வகுப்பறை பயிற்சிகள் மற்றும் செய்முறை பயிற்சிகள் நடத்தப்படும்.
இறுதித் தேர்வினை தமிழில் மட்டுமே எழுத வேண்டும் (கொள்குறி வினா அடிப்படையில்). இப்பயிற்சியில் கீழ்க்கண்ட பாடங்கள் பயிற்றுவிக்கப்படும்.
முதல் பருவம்
பாடம் 1: கூட்டுறவு கருத்தியலும் நடைமுறையும்
பாடம் 2: கூட்டுறவு சட்டம் மற்றும் தொடர்புடைய சட்டங்கள்
பாடம் 3: நிதி கணக்கியல்
பாடம் 4: கூட்டுறவு மேலாண்மை மற்றும் நிருவாகம்
பாடம் 5: கணினி மேலாண்மை மற்றும் தகவல் அமைப்பு
இரண்டாம் பருவம்
பாடம் 6: கூட்டுறவு தணிக்கை
பாடம் 7: கூட்டுறவு வங்கியியல்
பாடம் 8: நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும்
பாடம் 9: கடன் சார்பற்ற கூட்டுறவுகள்
பாடம் 10: செய்முறை பயிற்சி / கள ஆய்வு / திட்ட அறிக்கை தயார் செய்தல்
Educational Qualification
Educational Qualification Medium of Instruction Certificate No. Name of the Institution Year of Passing Total Marks Marks Secured Percentage Upload Marksheet
S.S.L.C*
--Choose--
No file chosen
--Choose*--
--Choose--
No file chosen
Degree
--Choose--
No file chosen
Post Graduate Degree
--Choose--
No file chosen
Choose ICM*
- SELECT -
Declaration
If I am selected as a trainee by your institute of cooperative management, I hereby abide the laws, rules and discipline of the training centre and regularly participate in the classes and examination by maintaining regular attendance and avoiding leaves.I know that I will be allowed to write the exam only if I have 80% Attendance. I also know that I will not be allowed to write the final examination if the attendance record for training is less than 80%.Submission of subjectwise internal record note book, attending two internal test and two practical study visits Also participate in monthly Parent/Teachers meeting regarding monthly attendance and training. If unable to continue the training due to unavoidable reasons, I agree that I will not demand to refund the tuition fees paid. Also I will attend the classroom examinations without fail. submission of subject wise internal record notebook, Attending two internal test of two practical study visit. In case of violating legal conditions of the training institute, I agree to be disqualified from the training without any prior notice.
In the institute I have selected for 2026-27 DCM(R) training if there are trainees joined less than 50 then I agree to join the nearest training institute to continue my training I also agree to pay the full fee in one installment while joining the training .
I hereby declare that, I have well known that all subjects in DCM Course taught only in tamil and examinations conducted only, in tamil language, where I have applied in the Concerned ICM.
I hearby read the prospectus for joining in the DCM course.
Parents/Guardian Declaration
I hereby abide the rules and regulations and also legal conditions for the aforesaid declarations.
Payment Details
Amount (Rs.)*
100
Upload Documents
Upload your Photo*
No file chosen (Jpg / Jpeg / Png) Less than 50 KB
your image
Upload your Signature*
No file chosen
(png / jpg/ Jpeg) Less than 20 KB
your image
Upload your Parents/Guardian Signature*
No file chosen
(png / jpg/ Jpeg) Less than 20 KB
your image
Preview
DIPLOMA IN COOPERATIVE MANAGEMENT (முழுநேரம் / Regular) 2026 - 2027
தேர்வு முறை மற்றும் தகுதி விவரங்கள்
இறுதித் தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் 40% மதிப்பெண் பெற வேண்டும்.
பாடம் 1-9: எழுத்து தேர்வு (30 மதிப்பெண்கள்) + அக மதிப்பீடு (10 மதிப்பெண்கள்) = 40 மதிப்பெண்கள்.
பாடம் 10: எழுத்து தேர்வு (20 மதிப்பெண்கள்) + அக மதிப்பீடு (10) + களப்பயிற்சி (10) = 40 மதிப்பெண்கள்.
வகுப்பு வாரியான தகுதிகள்:
40%-59%: இரண்டாம் வகுப்பு
60%-74%: முதல் வகுப்பு
75% மேல்: சிறப்பு நிலை
மேலாண்மை நிலைய ஒழுங்குமுறை
பயிற்சி நிலையத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சியாளர்கள் பயிற்சி நிலையத்தின் சட்டம், விதிகள் மற்றும் ஒழுக்கக் கட்டுபாடுகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். வருகைப் பதிவு, விடுப்பு எடுத்தல் மற்றும் பயிற்சி நிலைய தேர்வுகள் சம்பந்தமாகப் பயிற்சி நிலைய சட்ட திட்டங்களுக்கு பயிற்சியாளர்கள் கட்டுப்பட்டு இருக்க வேண்டும்.
பயிற்சி நிலையத்தின் சட்ட திட்டங்களை மீறி நடக்கும் பயிற்சியாளர்கள் எவ்வித முன் அறிவிப்பின்றி பயிற்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்.
பயிற்சிக்கான விண்ணப்பம் அனுப்பும் முறை
விண்ணப்பங்கள் www.tncu.tn.gov.in வழியாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
விண்ணப்ப காலம்: 08.06.2026 முதல் 20.07.2026 மாலை 5:00 மணி வரை.
தேவையான சான்றிதழ்கள்: SSLC, +2 மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ், ஜாதி சான்றிதழ்.
விண்ணப்பத்தில் Digital Signature மற்றும் Passport Size Photo இணைக்கப்பட வேண்டும்.
கட்டணம் செலுத்தப்படாவிட்டால், Payment Failure Button மூலம் மீண்டும் செலுத்தலாம்.
தேவையான சான்றிதழ்கள்:
S.S.L.C மதிப்பெண் பட்டியல் மற்றும் +2 மதிப்பெண் பட்டியல் (Marksheet),
பட்டப்படிப்பு பெற்றிருப்பின் அதற்கான Certificate
மாற்று சான்றிதழ் (Transfer Certificate)
ஜாதி சான்றிதழ் (Community Certificate)
குறிப்பு: இணையத்தளத்தின் வழியாக விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு 08.06.2026 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இறுதி நாள் 20.07.2026 அன்று மாலை 5.00 மணி வரை. அதற்கு பின்னர் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தை முன்னிட்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
விவரம் தேதி / காலம்
விண்ணப்பிக்கும் காலம் 08.06.2026 முதல் 20.07.2026 மாலை 5.00 மணி வரை
சேர்க்கைக்கு தகுதியான பயிற்சியாளர்கள் பட்டியல் இணையதளத்தில் வெளியிடும் நாள் 22.07.2026
பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு சான்றிதழ்கள் சரிபார்த்து சேர்க்கை மேற்கொள்ளும் நாள் 22.07.2026 முதல் 31.07.2026 வரை
பயிற்சி துவங்கும் நாள் 03.08.2026
விண்ணப்பங்கள் மேற்கூறிய நிபந்தனைகளுக்குட்பட்டு, தக்க சான்று நகல்கள் இணைக்கப்பட வேண்டும், அவ்வாறு இல்லையெனில் அவை நிராகரிக்கப்படும்.
கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி தமிழில் மட்டுமே பயிற்றுவிக்கப்படும்ம்.
பயிற்சிக்கான தேர்வுகளை தமிழில் மட்டுமே எழுத வேண்டும் (கொள்குறி வினா அடிப்படையில்).
விண்ணப்பதாரர்கள் கல்வி உதவி தொகை பெறுவதற்கான EMIS No.(+2 சான்றிதழில் உள்ளப்படி) அல்லது கல்லூரி பட்டபடிப்பு முடித்திருப்பின் UMIS No. (கல்லூரி சான்றிதழில் உள்ளப்படி) விண்ணப்பத்தில் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
குழுவின் பரிசீலனைக்கு நேரில் வருகை தரும்போது அனைத்து அசல் சான்றிதழ்களுடன் (பத்தாம் வகுப்பு உட்பட) இரு சான்றொப்பமிட்ட (Self Attested) நகல்களையும் (Two copies with attested) கொண்டு வர வேண்டும்.
0 Comments