Daily Updates

 NEET UG 2026 LATEST NEWS 📰 🗞️ 


NEET APPLICATION 


*NEET-UG 2026:*

STEPS TO APPLY ONLINE
    Apply for online registration

    Fill online Application Form

    Pay Examination Fee

    Download Confirmation Page

  Download Information Bulletin. : Click Here..


Register yourself NEET (UG) 2026
Register your profile by giving personal
details, contact details and address

Website Link 🔗:    Click Here




நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் பிப்ரவரி 8 முதல் மார்ச் 8 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது தேவைப்படும் ஆவணங்களின் விவரங்கள்:

1. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (Passport Size Photo)

2. போஸ்ட்கார்டு அளவு புகைப்படம் (Postcard Size Photo)

3.மாணவரின் கையொப்பம் (சாதாரண கையெழுத்தில் இருக்க வேண்டும் - Capital letters தவிர்க்கவும்)

4. இரு கைகளின் அனைத்து விரல்களின் ரேகைகள் (பெருவிரல் உட்பட)

5. 10-ஆம் வகுப்பு தேர்ச்சிச் சான்றிதழ் (Class 10th Passing Certificate)

6. 10-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் (Class 10th Marksheet)

7. 12-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் (மீண்டும் தேர்வு எழுதுபவர்கள் / Droppers-களுக்கு மட்டும்)

8. ஏதேனும் ஒரு புகைப்பட அடையாளச் சான்று (ஆதார் கார்டு / பான் கார்டு / 12-ஆம் வகுப்பு தேர்வு அனுமதிச் சீட்டு / வங்கி கணக்குப் புத்தகம்)

9. முகவரிச் சான்றாக ஆதார் கார்டு

10. சாதிச் சான்றிதழ் / EWS சான்றிதழ் (மத்திய அரசு அங்கீகரித்த படிவத்தில் அல்லது அதன் ரசீது)

*புகைப்படம் எடுக்கும்போது கவனிக்க வேண்டியவை:*

புகைப்படத்தில் முகத்தின் 80% பகுதி தெளிவாகத் தெரிய வேண்டும் (காதுகள் மறைக்கப்படாமல் இருப்பது அவசியம்).

கண்ணாடி அணிபவராக இருந்தால், கண்களில் வெளிச்சம் பிரதிபலிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.

 கருப்பு கண்ணாடி (Sun glasses) அணிந்த புகைப்படங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

புகைப்படத்தின் கீழ் பகுதியில் மாணவரின் பெயர் மற்றும் புகைப்படம் எடுக்கப்பட்ட தேதி குறிப்பிடப்பட்டிருப்பது நல்லது.

விண்ணப்பத்தைப் பதிவேற்றத் தொடங்குவதற்கு முன், இந்த ஆவணங்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்து தனித்தனி கோப்புகளாக (Files) உங்கள் போன் அல்லது கணினியில் தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.

*1. பதிவேற்றம் செய்ய வேண்டிய புகைப்படங்கள் & கையொப்பம்:*

பாஸ்போர்ட் புகைப்படம்:
10KB - 200KB (வெள்ளை பின்னணி அவசியம்).

போஸ்ட்கார்டு புகைப்படம் (4"x6"): 10KB - 200KB (வெள்ளை பின்னணி).

கையொப்பம்: 4KB - 30KB (வெள்ளைத் தாளில் கறுப்பு மை பேனாவால், சாதாரண கையெழுத்தில் இருக்க வேண்டும்).

விரல் ரேகைகள்: 10KB - 200KB (இரு கைகளின் அனைத்து விரல்களும் தெளிவாகத் தெரிய வேண்டும்).

*2. தேவையான சான்றிதழ்கள் (PDF வடிவில் - 50KB முதல் 300KB வரை):*

10-ஆம் வகுப்பு சான்றிதழ்கள்: மதிப்பெண் பட்டியல் மற்றும் தேர்ச்சிச் சான்றிதழ் (Passing Certificate).

12-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்: (Droppers / ஏற்கனவே முடித்தவர்களுக்கு மட்டும்).

அடையாளச் சான்று: ஆதார் கார்டு / PAN கார்டு / வங்கி கணக்குப் புத்தகம்.

முகவரிச் சான்று: ஆதார் கார்டு.

சாதிச் சான்றிதழ் / EWS: மத்திய அரசு அங்கீகரித்த படிவத்தில் இருக்க வேண்டும்.

 *தேர்வு கட்டணம் (Exam Fee):*

பொதுப் பிரிவு (OPEN): ₹1700

OBC / EWS: ₹1600

SC / ST / PWD: ₹1000







*📅 முக்கிய தேதிகள்:*

விண்ணப்பத் தொடக்கம்: 08 பிப்ரவரி 2026

விண்ணப்பிக்க கடைசி நாள்: 08 மார்ச் 2026 (இரவு 9:00 மணி வரை)

கட்டணம் செலுத்த கடைசி நாள்: 08 மார்ச் 2026 (இரவு 11:50 மணி வரை)

திருத்தங்கள் செய்ய (Correction Window): 10 மார்ச் - 12 மார்ச் 2026

*💡 முக்கிய குறிப்பு:* புகைப்படத்தில் முகம் 80% தெளிவாகத் தெரிய வேண்டும். பெயர் மற்றும் புகைப்படம் எடுத்த தேதியை படத்தின் கீழே குறிப்பிடுவது நல்லது.








#BREAKING || சென்னையில் குரூப் 2, 2ஏ தேர்வு ஒத்திவைப்பு


📌இன்று நடைபெறவிருந்த நிலையில் ஒத்திவைப்பு


📌தேர்வு மைய ஒதுக்கீட்டில் குளறுபடி என புகார்


👉சென்னையில் இன்று நடைபெற இருந்த குரூப் 2, 2a முதன்மை தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு


👉அரும்பாக்கத்தில் தேர்வு எழுதவிருந்தவர்களுக்கு நந்தனம் கல்லூரியில் தேர்வு மையம் மாற்றப்பட்டதால் தேர்வர்கள் போராட்டம் நடத்தினர்  


👉முன்னறிவிப்பின்றி தேர்வு மையம் மாற்றப்பட்டதாகக் கூறி தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்


👉சார்பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது 


👉தேர்வு மைய குளறுபடி புகாரால் சென்னையில் மட்டும் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு


#BREAKING | சென்னையில் குரூப் 2, 2ஏ தேர்வுகள் தள்ளிவைப்பு


#Chennai | #Group2 | #TNPSC | #TNPSCGroupExam | #GroupExam | #Group2A



Post a Comment

0 Comments